கூர்மையான பற்களால சோளக்கதிர்களைஅறுவடை செய்து அசத்துகிறது வெள்ளை நிற நாய்

by Staff / 25-10-2022 04:54:28pm
  கூர்மையான பற்களால சோளக்கதிர்களைஅறுவடை செய்து அசத்துகிறது வெள்ளை நிற நாய்

30 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றில் குட்டை இனத்தைச் சேர்ந்த வெள்ளை நிற நாய் ஒன்று தனது எஜமானரான விவசாயிக்கு உதவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில், சோள பயிர்களை பல்லாண்டு அனுபவம் வாய்ந்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கே டப் கொடுக்கும் வகையில், தனது கூர்மையான பற்களால சோளக்கதிர்களை வெட்டி சாய்க்கிறது.

வேக, வேகமாக வேலை செய்தாலும் ஒரு சோளக்கதிர்கள் கூட கீழே சிந்தாமல் அழகாக பயிர்களை அறுவடை செய்து அசத்துகிறது. தன்னை வளர்த்த விவசாய குடும்பத்தினருக்காக இப்படி நாய் ஒன்று வயலில் பாடுபடும் காட்சி  இணையத்தில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
 

 

Tags :

Share via
Logo