தேர்வு கட்டண உயர்வு: அமைச்சர் விளக்கம்
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு தாளுக்கு ரூ.150ஆக இருந்த தேர்வுக் கட்டணம் ரூ. 225ஆகவும் ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி உள்ளதால் ரூ.2,050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தேர்வு கட்டண உயர்வு இந்த செமஸ்டர் தேர்வுகளுக்கு பொருந்தாது என்றும் அனைத்து துணை வேந்தர்களிடமும் கலந்தாலோசித்து அடுத்தாண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டண முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
Tags :