இறுதி போட்டிக்கு வரும் ஆஸ்திரேலிய பிரதமர்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உலக கோப்பை இறுதிப் போட்டியைக் காண ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இந்தியா வருவார் எனத் தெரிகிறது. இந்தப் போட்டியை காண இந்திய பிரதமர் மோடியும் வருகை தர உள்ளார் என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மோடி ஸ்டேடியத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இருவரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மே மாதம் தனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு வருமாறு அந்தோனிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.அதன்படி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :