இந்தியாவுக்கு முதன்முறையாக சாம்பியன் பட்டம்

by Staff / 31-10-2022 11:47:53am
இந்தியாவுக்கு முதன்முறையாக சாம்பியன் பட்டம்

பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் சோய்-கிம் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி போட்டிக்கு முன்னேறினர். இறுதி போட்டியில், சாத்விக்- சிராக் ஜோடி 21-13, 21-19 என்ற செட் கணக்கில் லு சிங் யாவ்-யாங் போ ஹான் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை சாத்விக்- சிராக் பெற்றனர். சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாத்விக்- சிராக் வெல்லும் 3வது பட்டம் இதுவாகும்.

 

Tags :

Share via