குழந்தையுடன் சென்ற தந்தை சுட்டுக்கொலை

கொலம்பியாவில் குழந்தையுடன் சென்றவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த ஜெபர்சன் கோன்சலஸ் (29) என்பவர் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ட்ரிக் - ஆர் - ட்ரீட்டிங்கில் இனிப்புகளை எடுக்க தனது மூன்று வயது மகளுடன் சாலையை கடக்கிறார். இதற்கிடையில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கோன்சாலஸை தலையில் சுட்டுவிட்டு பைக்கில் தப்பி சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Tags :