கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் சுற்றித் திரிந்த மர்ம ஆசாமி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடற்கரை கிராமத்தில் அணுமின் நிலையம் உள்ளது.
இரண்டு உலைகள் மின் உற்பத்தியை தொடங்கி உள்ள நிலையில் மூன்றாவது மற்றும் 4வது அணுமின் உலைகள் ரூ 39 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வருகிறது.
அணு உலையின் பாதுகாப்பிற்காக வளாகத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் அளவிற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் வட மாநிலத்தைச் சார்ந்த மன நோயாளி ஒருவர் வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த போது அவரை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்நிலையில் செவ்வாய் அன்று காலை அணுமின் நிலைய வளாகத்தில் மர்ம ஆசாமி ஒருவர் வந்து உள்ளார். இதனை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த வீரர்கள் பார்த்தனர். உடனடியாக அந்த ஆசாமியை மடக்கிப்பிடித்து கூடங்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மனநோயால் பாதிக்கப்பட்ட நபர் என்பதும், தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.ஆனாலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :