மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை .

by Admin / 05-02-2026 04:47:18pm
மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை .

சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் காகங்கள் இறந்து வருவது குறித்து பொதுமக்களிடையே ஓர் அச்ச உணர்வு எழுந்த நிலையில், அடையாறு, காந்திநகர் ,பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர் போன்ற பகுதிகளில் சுமார் 1,500 க்கு மேற்பட்ட காகங்கள் உயிரிழந்த  நிலையில் தமிழக அரசு கண்காணிப்பு மற்றும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி உள்ளது..சென்னை அடையாறு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை போபால் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனம் ஆய்வு செய்ததில் ஹெச் 5 என் 1 என்கிற தீவிர பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த இறந்த பறவைகளை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும் என்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவு பெற்றுள்ளது. உயிரிழந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகளை வெறும் கைகளால் தொட வேண்டாம் என்றும் காகங்கள் அதிக அளவில் இறப்பதை கண்டால் உடனடியாக நகராட்சி மாநகராட்சி அல்லது கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ,இதுவரை மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை . பாதுகாப்பு கருதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை .
 

Tags :

Share via