குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

by Admin / 05-02-2026 04:59:39pm
 குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று நாடாளுமன்ற கூட்டத்துடன் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கிடையே பிரதமர் நரேந்திர மோடியின் பதிலு ரையின்றி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுவாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிறகு பிரதமர் பதிலளிப்பார் .ஆனால் ,எதிர்கட்சிகளின் தொடர் போராட்டத்தால் பிரதமரின் உரை இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அம ளியில்ஈடுபட்டன .குறிப்பாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம் நரவணவின் நினைவுக் குறிப்புகள் தொடர்பான விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின .2024 ஆம் ஆண்டிற்கு பிறகு பிரதமர் உரை இன்றி தீர்மானம் நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறை மக்களவையில் பிரதமர் பேசாத நிலையில் அவர் இன்று மாலை மாநிலங்கள் அவையில் இந்த தீர்மானத்தின் மீது பதில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் ஓம் .பிர்லா எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை நிராகரித்து தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டு நிறைவேற்றினார். நாளை காலை அவை 11.00 மணிக்கு ஒருத்தி வைக்கப்பட்டது..

 

Tags :

Share via