குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு-பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 06-02-2026 03:29:36am
 குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு-பிரதமர் நரேந்திர மோடி

மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசினார். பிரதமர் உரையாற்ற தொடங்கிய போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சர்வதிகாரம் செல்லாது என்றும் எதிர் கட்சிகளின் குரலை நசுக்காதே என்றும் கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் எதிர்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதற்கு பிரதமர் அவர்கள் சோர்வடைந்து சென்று விட்டனர் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். ராகுல் காந்தி மத்திய அமைச்சர் ரவ்நீத்சிங்பிட்டுவை துரோகி என்று குறிப்பிட்டதை பிரதமர் கடுமையாக எதிர்த்தார். இது முழு சீக்கிய சமூகத்திற்கும் எதிரான அவ மரியாதை என்று அவர் குறிப்பிட்டார். மேலும் ,மோடியே, உமது கல்லறை தோண்டப்படும் போன்ற கோஷங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியதன் மூலமாக தரம் தாழ்ந்த பேச்சு என்று வேதனைப்பட்டார். இந்தியா தற்போது அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் கொண்ட ஒரு தனித்துவமான பொருளாதாரமாக திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்ததோடு 2014க்கு முன் இந்தியா பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தது என்றும் தற்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற விரைவாக முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவில் உலகளாவிய நிலையை வலுப்படுத்தி உள்ளன என்றும் அவர் கூறினார் முந்தைய ஆட்சியில் வாரா கடன் அதிகமாக இருந்த நிலையில் தற்போது அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக குறைந்து வங்கிகள் ஆரோக்கியமாக உள்ளன என்றார் மேலும் எல் ஐ சி எஸ் பி ஐ மற்றும் எச் ஏ எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் பட்டியலிட்டு சொன்னார்.

 

Tags :

Share via