4 இலட்சம் ரூபாய் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்.3இலட்சம் ரொக்கபணம்  பறிமுதல்.2பேர் கைது

by Editor / 13-10-2024 11:32:43am
4 இலட்சம் ரூபாய் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்.3இலட்சம் ரொக்கபணம்  பறிமுதல்.2பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் தீவிரமான சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் ஆலோசனையின் படி தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கற்பக ராஜா, சுபாஷ் சந்திரபோஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் காளிமுத்து, தலைமை காவலர்கள் முத்துராஜ், திருமலை, காலியாத்து, ராஜசேகர், உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் புதூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது  கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் இருந்து சொகுசு கார் மற்றும் சரக்கு வாகனத்தில் புகையிலைப்  பொருட்கள் கொண்டு வரப்ப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நடத்திய வாகன தணிக்கையின் போது செங்கோட்டை வம்பளந்த்தான் முக்கு  பகுதியை சார்ந்த லிங்கராஜ் மற்றும் சுந்தர்ராஜன் ஆகிய இரண்டு நபர்கள் வந்த வாகனங்களை போலீசார் மறித்து சோதனை செய்யும் பொழுது  அந்த வாகனங்களில் நான்கு மூட்டைகளில் கூலிப் மற்றும் கணேஷ் புகையிலை மேலும் சில்லறை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கூலிபி, கணேஷ் புகையியைகைப்பற்றி விசாரணை நடத்தியதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதும், இவர்கள் செங்கோட்டை, புளியரை, அச்சன்புதூர்,வடகரை, இலத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது இதன் தொடர்ச்சியாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வைத்திருந்த 3 லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும்,புகையிலைப்பொருட்களையும்  பறிமுதல் செய்தனர் தொடர்ந்து புளியரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகின்றது மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

 

Tags : 4 இலட்சம் ரூபாய் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்.3இலட்சம் ரொக்கபணம்  பறிமுதல்.2பேர் கைது

Share via