கார்த்திக் சிதம்பரம் குழந்தைத்தனமாக இருக்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி.
முன்னாள் மத்திய அமைச்சரும் ,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார்.பின்னர் நிர்வாகிகள் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
திராவிட மாடல் பற்றி கார்த்திக் சிதம்பரம் விமர்சித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் சிதம்பரம்ஒரு அறியாத பிள்ளை என்று நான் நினைக்கிறேன்.காரணம் திராவிட மாடல் என்ன என்பதை மறைமலை நகரில் கூட ஸ்டாலின் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.நம்முடைய தமிழ்மொழி காப்பாற்றப்படவேண்டும் தமிழர்கள் வாழ்வில் உயர வேண்டும், வெளிநாட்டு முதலீடு அதிகமாக வர வேண்டும் இவற்றையெல்லாம் செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி என்று அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.கார்த்திக் சிதம்பரம் இன்னும் குழந்தை தனமாகவே இருக்கிறார் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
Tags :