பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமர்நாத் யாத்திரை

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஜம்முவில் இருந்து 4,400க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத்தை தரிசித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்முவில் உள்ள பால்டால் மற்றும் பஹல்காம் அடிப்படை முகாம்களை அடைந்த பின்னர் அமர்நாத் பனி லிங்க கோவிலுக்கு யாத்ரீகர்கள் புறப்பட்டனர். வியாழக்கிழமை வரை 2,66,955 பக்தர்கள் புனித குகைக்கு வருகை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
Tags :