சென்னையில் உள்ள வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல் நவம்பர் 25, 2025 வரை, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் செயல்படும்
சென்னையில் உள்ள வாக்காளர் உதவி மையங்கள் நவம்பர் 18, 2025 முதல் நவம்பர் 25, 2025 வரை, அனைத்து 947 வாக்குச்சாவடி மையங்களிலும் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் அறிவித்துள்ளார்.. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து 947 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த உதவி மையங்கள் செயல்படும்.. இன்று (நவம்பர் 19, 2025) முதல் நவம்பர் 25, 2025 வரை, மொத்தம் 8 நாட்களுக்கு இந்த மையங்கள் திறந்திருக்கும்..தினமும் காலை 10 .00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும்...2026- பொதுத் தேர்தலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, வாக்காளர்கள் தங்கள் படிவங்களை நிரப்புவதில் ஏற்படும். சந்தேகங்களுக்குத் தீர்வு காணவும், விவரங்களைச் சரிபார்க்கவும் .இந்த மையங்கள் உதவும்...புதிய வாக்காளர் பதிவு (படிவம் 6), பெயர் நீக்கம் (படிவம் 7), மற்றும் திருத்தங்கள் அல்லது முகவரி மாற்றங்கள் (படிவம் 8) தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறலாம்....குறிப்பாக, முதியவர்ள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு உதவ ஒருவருடன் இந்த மையங்களுக்கு வரலாம்.. வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் வாக்காளர் விவரங்களைச் சரியாக புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்..
Tags :


















