மதுரையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்.

by Staff / 01-09-2025 05:33:33pm
மதுரையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்.

பயணிகளின் வசதிக்காக மதுரையிலிருந்து பீகார் மாநில பரூணிக்கு   சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மதுரை - பரூணி  சிறப்பு ரயில் (06059) மதுரையில் இருந்து செப்டம்பர் 10, 17, 24, அக்டோபர் 01, 08, 15, 22, 29, நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய புதன்கிழமைகளில்  ‌இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு பரூணி சென்று சேரும்.  மறு மார்க்கத்தில் பரூணி - மதுரை சிறப்பு ரயில் (06060) செப்டம்பர் 13, 20, 27, அக்டோபர் 04, 11, 18, 25, நவம்பர் 01, 08, 15, 22, 29 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் காலை 07.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள்  திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர், நாயுடு பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, எலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், துவ்வாடா,  விஜயநகரம், ஸ்ரீகாகுலம் ரோடு, பலாசா,  குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பட்ரக், பலாசோர், கரக்பூர், அண்டுல், தன்குனி, பார்த்தமான், துர்காபூர், அசன்சால், சித்தரஞ்சன், மதுப்பூர், ஜசிடிஹ், ஜாஜா,  கியூல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டிகள்  இணைக்கப்படும்.இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) காலை 8 மணிக்கு துவங்குகிறது.

 

Tags : மதுரையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்.

Share via