இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மந்த்ராலயம் அருகே உள்ள கிலகசூகூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை நேற்று மூன்று இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதனையடுத்து, இளம்பெண்ணின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :