தமிழகத்தில் 4ஆவது முறையாக அமைந்த அதிமுக - பாஜக கூட்டணி

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.1998 மக்களவை தேர்தலில் தான் முதல் முறையாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. பிறகு 2004 மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தது அதிமுக. 2019, 2021 தேர்தலில் அதிமுக - பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பின்னர் கூட்டணி முறிந்து தற்போது 4வது முறையாக சேர்ந்துள்ளனர்.
Tags :