4 நிமிடத்தில் உரையை நிறைவு செய்த ஆளுநர்
ஆளுநர் உரையுடன் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஆளுநர் முதலில் தனது உரை வாசித்தார். வெறும் 4 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டு நிறைவு செய்துள்ளார். அரசு தயாரித்தது வழங்கிய உரையை ஆளுநர் படிக்கவில்லை. பேரவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்த வாழ்த்துவதாகக்கூறி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் எனக்கூறி உரையை உடனே முடித்துக் கொண்டார்
.தமிழக அரசு தயாரித்து கொடுத்ததில் உடன்பாடு இல்லாததால் அவர் மேற்கொண்டு வாசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது தமிழக அரசு குடியுரிமைச் சட்டத்தையும் மத்திய அரசு வெள்ள நிவாரணத்திற்கான நிதியை வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உரையில் இருந்ததன் காரணமாகவும் சாவர்க்கர், கோட்சே பற்றி கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததன் காரணமாகவும் அவர் உரையை தொடரவில்லை என்று சொல்லப்படுகிறது.. ஆனால், சபாநாயகர் முழுமையாக வாசிக்கும் வரை சட்டப்பேரவையில் ஆளுநர் தனி இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். தேசிய கீதம் இசைக்கப்படுகிற பொழுது கவர்னர் இருக்கையில் இருந்து எழுந்து வெளியேறினார்.
Tags :