கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் குதிரை ஒட்டகத்துடன் பொங்கல் திருவிழா.

by Editor / 15-01-2024 04:48:51pm
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் குதிரை ஒட்டகத்துடன் பொங்கல் திருவிழா.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் வன சுந்தர் தலைமையில் காவலர்கள் ஒரே வண்ண உடையில் உடை அணிந்து செண்டை மேளம் முழங்க காவல் நிலையம் முன்பு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். மேலும் பொங்கலை முன்னிட்டு குதிரை, ஒட்டகம் ஆகியவை  வரவழைக்கப்பட்டு இருந்தன. அதன் முன்பு காவலர்கள் தங்களது குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.இதனைத் தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தலைமையில் காவலர்கள் கேரளா மேளத்திற்கு ஏற்ப ஆட்டம்  போட்டு ஆடி மகிழ்ந்தனர்.

 

Tags : கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் குதிரை ஒட்டகத்துடன் பொங்கல் திருவிழா.

Share via
Logo