அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டியில் கார்த்தி இதுவரை 15 காளைகளை அடக்கி முன்னிலை.

by Admin / 15-01-2024 03:36:10pm
அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டியில் கார்த்தி இதுவரை 15 காளைகளை அடக்கி  முன்னிலை.

 அவனியாபுரத்தில் நடந்து வரும் வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு போட்டியில் கடந்த ஆண்டு கார் பரிசு வென்ற கார்த்திக் இந்த முறையும் தொடர்ந்து 15சுற்றுகளிலும் முதலிடம் பிடித்து வருகின்றார்.. தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் மாடுபிடி  வீரருக்கு ஒரு காரும் சிறந்த காளைக்கு ஒரு காரும் பரிசாக கடந்த ஆண்டுகளில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது.

பல்வேறு மாடுபிடி வீரர்கள் தங்களுடைய திறத்தை களத்தில் காட்டி வந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு காளைகளை அடக்கி வீரத்தை காட்டி வரும் இளைஞர் கார்த்தி இந்த ஆண்டும் காரை பரிசாக பெறுவார் என்கிற எதிர்பார்ப்பை அவருடைய: மாடுபிடி உத்தி  வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றது.,.கார்த்தி இதுவரை 15 காளைகளை அடக்கி இருக்கிறாா். 

. கார்த்தி,, ரஞ்சித் குமார், ,மாரியப்பன் , ,முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர்.. இதுவரை எட்டு சுற்றுகள் நடைபெற்று இருக்கின்ற நிலையில்  45-பேர் காயம்  அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

 

Tags :

Share via