ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

by Staff / 25-11-2023 04:02:15pm
ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

மேற்குவங்க மாநிலம் அசன்சோல் அருகே உள்ள குல்தி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம், சேத விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. தீ விபத்து காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

Tags :

Share via