நாளை வங்காளதேசம் தேர்தல் நடைபெற உள்ளது.இடைக்கால நிர்வாகத்தை உடனடியாக ஒப்படைக்கப்படும் -முகமது யூனுஸ்
நாளை வங்காளதேசம் தேர்தல் நடைபெற உள்ளது. 2024 சேக் ஹசீனா பதவி விலகிய பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும் தேர்தலுக்கு முந்திய சூழலில் இந்திய எதிர்ப்பு உணர்வு ஒரு முக்கிய அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டு வருவதாக பல்வேறு ஊடகங்கள் தெரிவிக்கின்றன .சேக் ஹசீனா இந்தியாவிற்கு தப்பிச் சென்றதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த உணர்வு மேலோங்கி வருவதனால் அரசியல் பதற்றம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தலை நியாயமான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன .இந்த தேர்தலோடு அரசியல் கட்டமைப்பை மாற்றி அமைக்கும் ஜூலை சாசனம் தொடர்பான பொது வாக்கு எடுப்போம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு புதிதாக பதவியேற்கும் அரசாங்கத்திடம் இடைக்கால நிர்வாகத்தை உடனடியாக ஒப்படைக்கப்படும் என்று அவர் உறுதியோடு தெரிவித்துள்ளார்.
Tags :












.jpg)






