கனடா கொலம்பியா மாகாண பள்ளியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

by Admin / 11-02-2026 10:39:47am
கனடா கொலம்பியா மாகாண பள்ளியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கனடாவின் கொலம்பியா மாகாணத்தில் டம்ளர் ரிட்ச் நகரில் உள்ள பள்ளியில் நேற்று இரவு சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலே உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 27 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவருடைய உடல் தீவிர கண்காணிப்பில் உள்ளது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கிடைத்த தகவலின் படி துப்பாக்கி சூடு நிகழ்த்தியது ஒரு பெண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டின் காரணமாக அந்தப் பகுதிக்கு அவசர எச்சரிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,அது தற்பொழுது விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு எதுவும் ஆபத்தில்லை என்கிற நிலையில் காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை விளக்கிக் கொண்டுள்ளதாக தகவல்.

 

Tags :

Share via
Logo