செந்தில் பாலாஜி பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.
திமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் பார்களுக்கான டெண்டர் ஒதுக்கீடு சட்டவிரோத பார்வை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜூலை 28 அன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளதால் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி அதிகார துஷ்பிரேகம் செய்ததற்கான காரணம் இருப்பதினால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் செந்தில் பாலாஜி பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த முறைகேடுகளில் 100 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குனர் உள்பட மொத்தம் ஏழு பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்படி வழக்குப் பதியப்பட்டுள்ளது. முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செந்தில் பாலாஜி சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Tags :















