தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் .
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் எடுத்து உள்ளார். தமிழ்நாட்டிற்குரிய கண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசின் போக்கை கண்டித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். கர்நாடக அரசின் இத்தகைய போக்கால் டெல்டா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாமல் கர்நாடகா அரசு மெத்தனம் காட்டி வருவதாகவும் இதனால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags :



















