நெல்லூரில் சரக்கு தடம் புரண்டு விபத்து

by Staff / 23-07-2024 11:53:35am
நெல்லூரில் சரக்கு தடம் புரண்டு விபத்து

ஆந்திர மாநிலம் நெல்லூரில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் நெல்லூரில் இருந்து பித்ரகுண்டா ஸ்டேஷனுக்கு சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தின் போது கடவையில் இரண்டு வேகன்கள் தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் விஜயவாடா நோக்கி செல்லும் ரயில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via