சிவசங்கர் பாபா பள்ளி  ஆசிரியர்கள் தலைமறைவு 

by Editor / 17-07-2021 04:18:53pm
சிவசங்கர் பாபா பள்ளி  ஆசிரியர்கள் தலைமறைவு 


சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர்.. இதையடுத்து, சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பிறகு இந்த வழக்கை சிபிசிஐடி கையில் எடுத்தது.. கைதாகி உள்ள பாபாவிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. அதேசமயம், சிவசங்கர் பாபாவின் இந்த காரியங்களுக்கு எல்லாம், அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேர் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது..
 
அதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கேளம்பாக்கம் பழனிகார்டன் பகுதியில் உள்ள 5 ஆசிரியைகளுக்கு நேரில் சம்மன் கொடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.. அதன்படி நேற்று அந்த 5 டீச்சர்களின் வீடுகளுக்கும் சென்றனர்.. ஆனால், 5 பேருமே அங்கு இல்லை.. சம்மனுடன் அதிகாரிகள் வருவது தெரிந்து முன்கூட்டியே தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
 
அந்த டீச்சர்கள் வீட்டில் இல்லாததால், அவர்களின் வீட்டு வாசலில் சம்மனை போலீசார் ஒட்டிவிட்டு சென்றனர்.. மேலும் தப்பி ஓடிய டீச்சர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.. இந்த 5 பேருமே சில தினங்களுக்கு முன்பு சிவசங்கர் பாபா பற்றி நல்லவிதமான கருத்துக்களை சொன்னார்கள்.. முக்கியமாக சிவசங்கர் பாபா ரொம்ப நல்லவர் என்று திடமாக சொல்லி இருந்தனர். 
சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை சொன்னதால், எந்த அடிப்படையில் இதுபோன்ற கருத்துக்களை நீங்கள் தெரிவித்தீர்கள் என்பது பற்றி அந்த டீச்சர்களிடம் விசாரிப்பதற்காகவே போலீசார் சம்மனுடன் சென்றதாக தெரிகிறது. 
வருகிற திங்கட்கிழமை முதல் 5 டீச்சர்களையும் நேரில் அழைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.... ஆனால் அதற்குள் 5 பேருமே எஸ்கேப் ஆகி உள்ளனர்.

 

Tags :

Share via