புதுச்சேரி -கோவில்  உண்டியலை உடைத்த வடமாநில வாலிபர் கைது. 

by Editor / 24-07-2023 10:36:55am
புதுச்சேரி -கோவில்  உண்டியலை உடைத்த வடமாநில வாலிபர் கைது. 

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் உள்ள  சங்கோதியம்மன்  கோவில் உண்டியலை வாலிபர் ஒருவர் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார். பொதுமக்கள் கையும் களவுமாக வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஸ்டீபன் வன்லால்லுவா (வயது 26) என்பதும், புதுச்சேரியில் உள்ள ஓட்டலில் வேலை செய்வதும் தெரியவந்தது. போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo