இறந்த இரண்டு நபர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் மூலம் 7 பேர் பயனடைந்துள்ளனர்-அமைச்சர்

by Editor / 26-07-2022 03:43:43pm
இறந்த இரண்டு நபர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் மூலம் 7 பேர் பயனடைந்துள்ளனர்-அமைச்சர்

மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: தமிழகத்தில் துவங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு தமிழக சுகாதாரத் துறையிடம் விவரங்களைச் சேகரித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் டிசம்பர் மாதம் எலும்பு வங்கி 40 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் திறக்கப்பட்ட வங்கியில் 36 எலும்புகள் பெறபட்டுள்ளன.இறந்த இரண்டு நபர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் மூலம் 7 பேர் பயனடைந்துள்ளனர். போலீஸ் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்த சிகிச்சை மூலம் பயனடைந்துள்ளனர்.மதுரை எய்ம்ஸ் கட்டட வடிவமைப்பிற்கான டெண்டர் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் வரைபடம் தயாரித்து எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.  எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் துவங்கிவிடும் என்றார்.

 

Tags : 7 people have benefited from the bones taken from two deceased persons-Minister

Share via