காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம்

by Staff / 13-10-2023 11:54:59am
காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம்

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்தியத் தேர்தல் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தெலங்கானாவுடன் மத்தியப் பிரதேச தேர்தலுக்கான ஆலோசனை நடைபெறுகிறது. ஸ்கிரீனிங் கமிட்டி அளிக்கும் பட்டியலில் இருந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா வேட்பாளர் பட்டியல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via