திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சாமி தரிசனம்
இன்று அதிகாலை சென்னையில் இருந்து தனி விமானத்தின் மூலம் மதுரை வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வந்தார். பாரம்பரிய பட்டு வேட்டி மட்டும் சட்டை அணிந்து வந்த விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பக்தர் சார்பாக அவருக்கு வெற்றிவேல் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் அவர் கடற்கரைக்கு சென்று கடல் நீரில் கால்களை நனைத்து கொண்டார். கோவிலில் அவருக்கு சத்ரு சம்ஹார பூஜையும் நிகழ்த்தப்பட்டது. அவருடன் பொதுச்செயலாளா் புஸ்சிஆனந்த்தும் சாமிதாிசனத்தில் பங்கேற்றாா்.ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியாக உள்ள நிலையில் அவர் இந்த சாமி தரிசனத்தில் கலந்து கொண்டார். தமிழக வெற்றி கழகத் தலைவர் வருகையை அறிந்த அவரது தொண்டர்களும் ரசிகர்களும் கோவிலில் திரண்டதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
Tags :



















