மீனாட்சியம்மனுக்கு சுந்தரேஸ்வரர் வைரக் கற்கள் பதித்த திருமாங்கல்யத்தை அணிவித்தார்.
மதுரையின் அடையாளமாக திகழும் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்வு சித்திர திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படுகின்றது. இன்று காலை 8 35 மணி முதல் 8 59 மணியளவில் மிதுன லக்னத்தில் திருக்கல்யாண வைபவம் பவளக் கனிவாய் பெருமாள் தாரை வார்த்து கொடுக்க மீனாட்சியம்மனுக்கு சுந்தரேஸ்வரர் வைரக் கற்கள் பதித்த திருமாங்கல்யத்தை அணிவித்தார். இந்நிகழ்விற்கு பிறகு பெண்கள் தங்கள் தாலிச் சரடை மாற்றிக் கொண்டு தீர்க்க சுமங்கலியாக இருக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் வழிபட்டனர். திருக்கல்யாண வைபவம் முடிந்ததும் கல்யாணத்திற்கு வந்திருந்த பக்த கோடிகள் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் கல்யாண விருந்து நடைபெற்றது விருந்துண்ட பக்தர்கள் கல்யாண மொய் விருந்தை எழுதி சென்றனர். நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது. மே ஒன்றாம் தேதி அதிகாலையில் வைகை ஆற்றில் தங்க குதிரையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19 இல் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Tags :



















