by Editor /
28-06-2023
09:54:13am
இந்துக்களின் புனித ஆலயங்களில் அமர்நாத் குடைவரைகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய கோயில் ஆகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு தரிசனம் செய்வது வழக்கம். அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. முன்னதாக யாத்திரைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பாதுகாப்பு அளித்து வந்தது. அதற்கு பதிலாக இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ஐடிபிபி) மூலம் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த வருடாந்திர பயணம் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடைகிறது.
Tags :
Share via