10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

by Editor / 28-06-2023 09:51:21am
10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது. மாநிலங்களவையில்  குஜராத் (3), மேற்குவங்கம் (6), கோவா (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10  உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிவடையவுள்ள நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த லுசின்ஹோ, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூலை 24ஆம் தேதி அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தற்போதே நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.
 

Tags :

Share via

More stories

Logo