நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் இயற்கை எய்தினார்.
தமிழ்த்திரை-மலையாளம்-தெலுங்கு என தென்னந்திய மொழிகளில் நடத்தும் படத்தை இயக்கியவருமான பிரதாப் போத்தன் திருவனந்த புரத்தை பூர்வீகமாக க்கொண்டவர்.1952 ஆகஸ்ட்13 இல் பிறந்த பிரதாப் ஊட்டியில் லாரன்ஸ் கான்வென்டிலும் சென்னை தாம்பரம் கிறித்துவ கல்லூரியிலும் கல்வி பயின்றார்.தமிழில் 1980 இல் மூடுபனி. வறுமையின் நிறம் சிவப்பு.நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள்(81) நடித்துப் புகழ்பெற்ற அவர் நடிகை ராதிகாவை1985 திருமணம் செய்து பின்பு கருத்து முரண்பாட்டால் 1986 பிரிந்தனர்.
பின்னர் அமலா சத்திய நாத் என்பவரை மறு மணம் செய்தார் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.மலையாளத்தில் டெய்சி, யாத்ர மொழியில் நடித்துள்ளார் .தமிழில் வெற்றி விழா,சீவலபேரி பாண்டி ,லக்கி மேன் படத்தைஇயக்கியுள்ளார்.பிரதாப் போத்தன் தம் 70 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கீழ்பாக்கத்திலுள்ள தம் அடுக்குமாடி வீட்டில் இயற்கை எய்தினார்.
Tags :