தமிழரின் தொழில் நுட்பம்

by Admin / 04-02-2022 02:16:52am
 தமிழரின் தொழில் நுட்பம்

 



இன்றைக்கு பணமும் காசும் அச்சடிக்கிற அதிகாரம் படைத்த நிறுவனம் ரிசர்வ் வங்கி.இது மத்திய அரசின் நிதி
அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவது. தொன்மை தமிழ்ச்சமூகம் தம் நிலத்தில் விளைந்த பொருள்களை
அருகிலுள்ள நாட்டிற்கு சென்று பண்ட மாற்றாக பொருள்களை கொடுத்து பொருளை வாங்கி வந்தனர்.காலம்
செல்ல செல்ல அரசு எனும் கட்டமைப்பு வலுப்பெற்று,பொருளாதாரம் எனும் சிந்தனை மக்கள் சார் நலனோடு
அரசு பொது காசு புழக்க முறையை உருவாக்கி,ஒவ்வொரு பொருளுக்கும் இது தான் விலை எனும் பொது பொருளாதார
விதியை உருவாக்கி, பொருளுக்கு விலையும் உழைப்புக்கு கூலியும் நிர்ணயிக்கப்பட்டு காசு எனும் அரசின்
 அங்கீகாரத்தை கொண்டு பரிமாற்றமுறையின் மூலம் எளிய முறையில் பொருளை விற்பதும் வாங்குவதும்
உழைப்பை கொடுத்து காசு வாங்கி தேவையை பூர்த்தி செய்வதில் சமூக இயக்கம் சிக்கலின்றி நகர்ந்தன.அரசு
காசு  உருவாக்க இயந்திரங்கள் இல்லாத காலத்தில் தங்க காசு,செம்புகாசு,பித்தளைகாசு.உருக்கிலான காசை
வடிவமைத்து உருவாக்க,பரம்பரை தொழில்நுட்பத்தை கொண்டு உலோக ஆளுமை கொண்ட கம்மியர்,கம்மாளர்
எனும் பண்டைய அடையாளங்களோடு இயங்கிய விஸ்வகர்மா சமூகத்தினரிடம் அரசு காசு தயாரிக்கும் பொறுப்பையும்
உரிமையையும் வழங்கியது.அரசால் அனுமதிக்கப்பட்ட காசு வார்க்கும் தொழிற்கூடங்கள் இருந்த பகுதிதான்
அக்கசாலை இன்றைக்கும் இந்த பெயர் பல ஊர்களில் வழக்கத்திலும் புழக்கத்திலுமுள்ள வீதியாக இருக்கிறது ,
ஆனால்,யாருக்கும் அந்த பெயரோடு கூடிய வரலாறு தெரியாது.இனியேனும் தெரிந்து கொள்வோம்.

 

 தமிழரின் தொழில் நுட்பம்
 

Tags :

Share via