நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்திய போது 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் உதவி கோட்ட பொறியாளர் ரங்கபாண்டியன் வீடு அமைந்துள்ள மதுரை மாநகர் ஆனையூர் அருகேயுள்ள எஸ்.வி.பி. நகர் பகுதியில் உள்ள ரங்கபாண்டியன் வீட்டில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதலாக தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் சோதனை நடத்தினர். முதற்கட்டமாக வங்கி பண பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் நகைகள் இருக்கிறதா என்பதைக் குறித்தான சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. சோதனையின் போது கைப்பற்றப்படும் ஆவணங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையை நடத்த உள்ளனர்.
Tags :