துவங்கிய கோடை காலம் - ஜூஸ் கடைகளில் ரெய்டு

தமிழகத்தில் ஜூஸ் கடைகள், குளிர்பான மொத்த விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யவேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரம் இல்லை என்றால் கடைக்கு அபராதம் விதித்து, உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு துறைக்கு, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோடையில் பொதுமக்கள் அதிகமாக ஜுஸ் குடிப்பதால் சுகாதாரமற்ற பானங்களை கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags :