ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்

நாமக்கல் மாவட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதி நகர் பகுதியில் வசித்து வந்த, தனியார் வங்கி ஊழியர் பிரேம் ராஜ் என்பவரது மனைவி மோகனப்பிரியா (33) மகள் பிரினிதி (6), மகன் பிரனிஷ் (1.1/2) ஆகிய 3 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரேம்ராஜ் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதைத்தொடர்ந்து, கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :