திமுக கூட்டணி நீடிப்பது குறித்து தனது கட்சியின் அரசியல் தலைமை மறுபரீ சீலனைதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்

by Admin / 16-03-2026 12:38:12am
திமுக கூட்டணி நீடிப்பது குறித்து தனது கட்சியின் அரசியல் தலைமை மறுபரீ சீலனைதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணி நீடிப்பது குறித்து தனது கட்சியின் அரசியல் தலைமை மறுபரீ சீலனை செய்ய பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என வேல்முருகன் கடந்த 2021 தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தனது கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகும் அவர் தெரிவித்தார் . வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பத்து முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என திமுகவிடம் தாம் வலுவிறுத்தியதாகவும் இந்த கோரிக்கைகள் குறித்து திமுக தரப்பிலிருந்து இதுவரை உரிய பதில் அல்லது பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வரவில்லை என்றும் அவர் தெரிவித்ததோடு திமுக தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது அல்லது மாற்று அணியில் இணைவது குறித்து தலைமை குழு முடிவு எடுக்கும் என அவர் குறிப்பிட்டாா்.. இருப்பினும் பாஜக தலைமையிலான கூட்டணி இணைய வாய்ப்பு இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்..

 

Tags :

Share via