பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சந்துரு-நந்தினி தம்பதியின் மகள் பூஜா (13), அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை நாளில் தோழிகளுடன் விளையாடிவிட்டு வீடு திரும்பிய பூஜாவை, சரியாகப் படிக்கவில்லை எனக் கூறி பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தார். போலீசார் உடலைக் கைப்பற்றி, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :


















