5000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கரூர் மாவட்டத்திற்காக செயல்படுத்தி உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 01-04-2026 11:56:23pm
 5000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கரூர் மாவட்டத்திற்காக செயல்படுத்தி உள்ளதாக  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

இன்று காலை திருச்சியிலும் அதனை தொடர்ந்து கரூரிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது ஆட்சியில் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கரூர் மாவட்டத்திற்காக செயல்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக அரசின் அரசியல் செய்யாத சாதனைகளாகவும் முக்கிய நலத்திட்டங்களாகவும் அவர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கப்படுவதாகவும் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பெண்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வது அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான காலை உணவு வழங்கும் திட்டம் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள மக்களைத் தேடி  மருத்துவ சேவை திட்டம், அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் 7.5 இட ஒதுக்கீடு மற்றும் கல்விச் செலவுகளை அரசு ஏற்கும் திட்டங்கள் என அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால பின்னடைவை சுட்டிக்காட்டியவர் திமுக அரசு எந்த ஒரு மாநில அரசும் செய்ய முடியாத அளவிற்கு சாதனைகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் கருவூரில் திமுக வேட்பாளர்களின் வெற்றி 100% உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

 

Tags :

Share via
Logo