தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது
தேனி மாவட்ட முதன்மகல்வி அலுவலர் செந்திவேல்முருகன் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் ஆடியோ குறுஞ்செய்தியில், இன்று சனிக்கிழமை 05.11.2022 அன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை தினமாகும். வடகிழக்கு பருவமழையால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள்,நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள்,ஐசிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags :



















