கேரளா தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் அடுத்த 48, 72 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடையும்.

by Staff / 15-06-2025 09:35:32am
கேரளா தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் அடுத்த 48, 72 மணி நேரத்திற்கு  தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடையும்.

 

கேரளா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளின் நீர்நிலைகளின் அருகே செல்வதைத் தவிருங்கள்.

கோவை, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கும் ஆங்காங்கே அதி கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் தீவிர மழைக்கும் 200, 300 மிமீ வரை மழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

மேலும் தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழைக்கும் 100, 200 மிமீ வரை மழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

இதே மாவட்டங்களில் பரவலாக லேசான மிதமான மழைக்கும் மேற்கு பகுதிகள் மற்றும் தென்மேற்கு பருவமழை பொழியும் சமவெளி பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் மேற்கு மாவட்டங்கள் மற்றும் மேற்கு உள் மாவட்டங்கள் மற்றும் தென், தென் உள் மாவட்டங்களில் சாரல், லேசான மழைக்கும் ஆங்காங்கே மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது

 

Tags : தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடையும்.

Share via