பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை சிறப்பு காவல் படை அதிகாாி கைது

by Admin / 16-03-2026 12:24:23am
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை சிறப்பு காவல் படை அதிகாாி கைது

கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை நாலாவது பட்டாலியன் கண்காணிப்பாளராக பணியாற்றிய செந்தில்குமார் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.செந்தில்குமார் தன் பட்டால் எனில் பணியாற்றிய பெண் காவலர் மற்றும் பெண் ஊழியர்களிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் ஆபாசமாக பேசியதாகவும் புகார்கள் எழுந்தன இந்த புகார்களை விசாரித்த உள் புகார் குழுவின் பரிந்துரையின் படி கடந்த பிப்ரவரி மாதத்தில் இவர் பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார் பாதிக்கப்பட்ட பெண் காவலர் மார்ச் பன்னிரண்டாம் தேதி கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மார்ச் 14 அன்று செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஆச்சர் படுத்தப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை சிறப்பு காவல் படை அதிகாாி கைது
 

Tags :

Share via