ரூ.100 கோடியை நெருங்கிய ஜெயிலர்

by Staff / 11-08-2023 12:54:06pm
ரூ.100 கோடியை நெருங்கிய ஜெயிலர்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது. தமிழகத்தில் ஜெயிலர் திரைப்படம் சுமார் 29.46 கோடி வசூல் செய்த நிலையில், இந்தியா முழுவதும் ரூ.55 கோடியும், உலகம் முழுவதும் ரூ.96 கோடியும் வசூல் ஈட்டியுள்ளது. தமிழ் படம் ஒன்று முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையை ஜெயிலர் பெற்றுள்ளது. தொடர் விடுமுறை வருவதால் விரைவில் ஜெயிலர் திரைப்படம் ரூ.200 கோடி வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories