விமானப்படை அதிகாரிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு...
உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் பணியாற்றி வரும் இந்திய விமானப்படை அதிகாரிகளில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய தலைமை மருத்துவ அதிகாரி நேபாள் சிங், உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் 10 குழுக்களை தாங்கள் நியமித்துள்ளதாகவும், அவரது குடியிருப்பு மற்றும் பணியிட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம் குறிப்பிட்டுள்ள அவர், வீடு-வீடாக சென்று சர்வே மற்றும் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
விமானப்படை அதிகாரியுடன் தொடர்பில் இருந்த 22 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.
Tags :