செல்வாக்கு மிக்க தலைவர் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது-இபிஎஸ் கோரிக்கை
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி 4 ஆயிரம் நாட்கள் சிறையில் இருந்தவர் தேவர் திருமகனார். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி, செல்வாக்கு மிக்க தலைவர் என நிரூபித்து காட்டியவர் தேவர் என புகழாரம் சூட்டினார்.
Tags : செல்வாக்கு மிக்க தலைவர் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது-இபிஎஸ் கோரிக்கை


















