அதிமுகவின் கொங்கு கோட்டையை உடைத்த திமுக-நன்றி தெரிவித்த அண்ணாமலை.  

by Editor / 05-06-2024 12:15:34am
அதிமுகவின் கொங்கு கோட்டையை உடைத்த திமுக-நன்றி தெரிவித்த அண்ணாமலை.  

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில், தற்போது திமுக மீண்டும் அங்கு வெற்றி பெறத் தொடங்கியுள்ளது. 1996ல் திமுகவைச் சேர்ந்த மணிமாறன் கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் 1999, 2004, 2009, 2019 ஆகிய தேர்தல்களில் திமுகவின் கூட்டணி கட்சிகளே கோவையில் போட்டியிட்டன. இந்த நிலையில் 28 வருடங்களுக்குப் பிறகு, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோவையில் மகத்தான வெற்றியை திமுக பதிவு செய்துள்ளது.மேலும் இந்த தேர்தல் தோல்வி குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைதந்து 
எக்ஸ் தள பதிவில், “கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவையின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

 

Tags : அதிமுகவின் கொங்கு கோட்டையை உடைத்த திமுக-நன்றி தெரிவித்த அண்ணாமலை  

Share via