போதைப்பொருட்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி

by Editor / 13-08-2022 02:19:47pm
போதைப்பொருட்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி

 போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அவர் தனது அறிக்கையில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் பொருள்களால் இளைஞர் சமுதாயம் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மாணவ மாணவியர் போதை பழக்கத்துக்கு ஆளாகி அவர்களை இதில் இருந்து மீட்க முடியாமல் பெற்றோர்கள் தவிப்பது தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியில் இருந்து மீட்க ஆக்கப்பூர்வமான வழிகளை கையாண்டு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories