பா.ஜ.கபுதிய தேசியத் தலைவராக நிதின் நவின் 20-ம் தேதி இன்று கட்சித் தலைமையகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) புதிய தேசியத் தலைவராக நிதின் நவின் 20-ம் தேதி இன்று புது தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
45 வயதான நிதின் நவின், பாஜகவின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் தேசியத் தலைவரானவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.இப்பதவிக்கு வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Tags :



















